iMOL Archives - ரஞ்சிதா எடுத&#
Welcome iMOL Archives

imol

 

 
Home 2SubscribeTrigger HappyEthnic ClashForumHistorySocialPoliticsEconomyEducationPlantation WorkersAbout me
Silence is not an option when things are ill done - Lord Alfred Dennings
Search   in  

 Create an AccountMain Home | Submit News | Your Account | Content | Topics | Top 10  

Modules
· Home
· Advertising
· AvantGo
· Feedback
· Forums
· Private Messages
· Recommend Us
· Search
· Statistics
· Stories Archive
· Submit News
· Surveys
· Top 10
· Topics
· Your Account

Who's Online
There are currently, 10 guest(s) and 0 member(s) that are online.

You are Anonymous user. You can register for free by clicking here

Languages
Select Interface Language:


Random Headlines

Tamil Dailies
[ Tamil Dailies ]

·New Tamil daily Thina Kural to be launched Feb 9
·Subra tormentor ‘leaves’ Tamil Nesan
·Tamil blady's
·Kogilan trashed Malaysian Tamil Dailies
·Makkal Osai back on the stands on Saturday
·Makkal Osai Wants Explanation On Non-extension Of Publishing Permit
·Makkal Osai loses licence
·Publishing License denied for Makkal Osai
·Subra saddened by daily's suspension

  
ரஞ்சிதா எடுத&#

Contributed by Anonymous on Thursday, March 18 @ 11:01:00 CDT

Religion
vikatan.com, Mar 17 2010

கணவரா... காவியா..?
நினைத்துப் பார்க்க முடியாத குற்றச்சாட்டுக்கு ஆளான பரமஹம்ச நித்தியானந்தரே மனம் திறந்து அவர் தரப்பு நியாயத்தை(?) சொல்லிக் கொண்டிருக்கிறார். கேள்வியின் நாயகியான நடிகை ரஞ்சிதா மட்டும் இன்றுவரை எந்தக் கருத்தும் சொல்லாமல் கப்சிப்பாகவே இருக்கிறார். 'கேரளாவில் இருக்கிறார்' என அவரை மையமாக வைத்துக் கிளம்பிய அனுமானங்கள்... இப்போது அவர் வெளிநாட்டுக்குப் பறந்து விட்டதாக எல்லை தாண்டி விரிந்து கொண்டிருக்கின்றன. சென்னை தி.நகரில் உள்ள ரஞ்சிதாவின் வீட்டில் பூட்டு தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு மிக நெருக்கமான சிலரிடம் பேசினோம்.


''ரஞ்சிதா இப்போது எங்கே இருக்கிறார் என்பதை எங்களால் சொல்ல முடியாது. மீடியாக்களால் மட்டுமல்லாமல்... போலீஸ், அரசியல் தரப்பு ஆட்கள், தியானபீடத்துக்கு நெருக்கமானவர்கள் என பலராலும் - பல்வேறு நோக்கங்களோடு அவர் தேடப்படுகிறார். அவரை மையமாக வைத்து நடக்கும் விவகாரங்கள் அவருக்கே புரிபடவில்லை. அதனால்தான் எப்போதும் வெளிப்படையாகப் பேசத் தயங்காத ரஞ்சிதா, இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் இருக்கிறார்!'' எனச் சொன்னவர்கள், ரஞ்சிதா, நித்தியானந்தரோடு அறிமுகமான கதையைச் சொல்லத் தொடங்கினார்கள். ''குடும்பரீதியான சில பிரச்னைகளாலும் உடல் கோளாறுகளாலும் இரண்டு தடவை வாழ்க்கையையே வெறுக்கும் முடிவுக்குச் சென்றவர் ரஞ்சிதா. சினிமா மற்றும் சின்னத் திரைப் பக்கம் கவனத்தைத் திருப்பி, மனநிம்மதியை மீட்க நினைத்த அவருடைய முயற்சி பலிக்கவில்லை. வடக்குப் பக்கம்இருந்த கணவரோடு தாமரை இலை தண்ணீராக இருந்த அவருடைய உறவு ஒரு கட்டத்தில் முடிவுக்கே வந்துவிடும் போலானது. அப்போதுதான், நித்தியானந்தர் பற்றி நெருக்கமானவர்கள் 'கேன்வாஸ்' செய்யவும்... கணவரோடு சேர்ந்து ஆசிரமத்துக்குப் போனார். ரஞ்சிதாவைக் காட்டிலும் நித்தியானந்தரின் மேல் அவர் கணவ ருக்கு பிரமிப்பு அதிகம் ஏற்பட்டுவிட்டது. ரஞ்சிதா ஒரு கட்டத்தில் பிடதி ஆசிரமத்திலேயே தங்க முடிவெடுத்தபோதும் கணவர் அதைத் தடுக்கவில்லை. அனைத்து விதமான யோக முறைகளையும் ரஞ்சிதா வெகு சீக்கிரமே கற்றுக் கொண்டார். குறைந்த காலத்திலேயே நித்தியானந்தருக்கு நெருக்கமானவராக மாறி... பல வெளிநாடுகளுக்கும் அவரோடு போய் வந்தார். சிங்கப்பூரில் நடந்த ஒரு விழாவில் வெளிப்படையாக மேடையிலேயே நித்தியானந்தருக்கு அருகில் ரஞ்சிதா அமர்ந்திருந்தார். அந்தளவுக்கு அவருடைய நெருக்கம் வளர்ந்ததை மடத்தில் உள்ள சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாமியாரின் நிழலாக வலம் வந்த காலத்திலும் டெலி சீரியல் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதா. முன்பெல்லாம் ஷ¨ட்டிங் ஸ்பாட்டுக்கு அவர் வந்துவிட்டால் அந்த இடமே கலகலப்பாகும். நித்தியானந்தரின் அறிமுகத்துக்குப் பின்னர் எந்நேரமும் அமைதியும் தனிமையும்தான்!'' என்றவர்கள்... ''சி.டி-யில் வரும் காட்சிகள் தனது சம்மதத்தோடுதான் அரங்கேறின என்று ரஞ்சிதா சொல்லும் வரைதான் நித்தியானந்தருக்கு சட்டப் பாதுகாப்பு. தனக்கெதிராக அவர் போக மாட்டார் என்று நித்தியானந்தர் உறுதியாக நம்பினாலும், அவருடைய குடும்பத்தினர் மூலமாக 'பிளாக்மெயில்' பார்ட்டிகள் சிலர் ரஞ்சிதாவின் மனதை மாற்றக்கூடும் என்று நினைத்தார். தன் சட்ட ஆலோசகர்களிடம் பேசி கிடுகிடுவென்று சில ஏற்பாடுகளை தற்போது செய்து முடித்திருக்கிறார் நித்தியானந்தர்...'' என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்கள். இதையே நூல் பிடித்து நாம் மேற்கொண்டு விசாரித்தோம். ஆசிரம தரப்பில் இருக்கும் சில சோர்ஸ்கள், ''தொலைக்காட்சியில் சி.டி. காட்சிகள் ஒளிபரப்பான தினத்தன்று இரவு தனது தி.நகர் வீட்டில்தான் தங்கி இருந்தார் ரஞ்சிதா. போன் மேல் போனாக விசாரிப்புகள் படையெடுக்கவும்... 11 மணிவாக்கில் வீட்டைவிட்டுக் கிளம்பிப் போனார். அவர் நேரே போனது மும்பையில் உள்ள நித்தியானந்தருக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் வீட்டுக்குத்தான். அந்த நண்பர் மூலமாக அடுத்த நாள் மதியமே நித்தியானந்தர் தங்கி இருந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார் ரஞ்சிதா. அவரது கால்களைக் கட்டிக்கொண்டு ரஞ்சிதா கதறி அழுததாகவும்... நித்தியானந்தர் அவரை சமாதானப்படுத்திய கையோடு அவருக்கு உறுதுணையாக ஐந்து பேரை நியமித்ததாகவும் கேள்விப்பட்டோம்.. இதற்கென்றே ஒரு பட்ஜெட்டும் ஒதுக்கப்பட்டதாக அறிகிறோம். இப்போதும் ஹரித்துவாரில் இருந்தபடி ரஞ்சிதாவோடு தொடர்ந்து போனில் பேசி தைரியப்படுத்திக்கொண்டே இருக்கிறார் சுவாமிஜி...'' என்றார்கள். இதற்கிடையில் இன்னொரு பரபர திருப்பமும் அரங்கேறி இருக்கிறது. சென்னையில் இருந்த ரஞ்சிதாவின் பெற்றோர், தங்கை ஆகியோரை ரஞ்சிதாவின் கணவர் ஒளரங்காபாத்துக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டாராம். இதற்கான ஏற்பாட்டை சென்னையில் உள்ள தாய்ப் பாசம் மிக்க சினிமா தயாரிப்பாளர் ஒருவர்தான் செய்து கொடுத்தாராம். இதன் பின்னணி குறித்து விசாரித்தோம். ''ரஞ்சிதாவை ஒரு போலீஸ் அதிகாரியே தொடர்பு கொண்டு, நித்தியானந்தருக்கு எதிராக பாலியல் புகார் கொடுக்கச் சொல்லி மிரட்டி இருக்கிறார். இதைத் தொடர்ந்துதான் வேகவேகமாக மேற்சொன்ன ஏற்பாடுகள் நடந்தன...'' என்று சொல்லப்பட்டது. போலீஸ் தரப்பில் விஷயமறிந்த வர்களோ, ''இந்த விவகாரத்தில் யாரெல்லாம் எதிரெதிரே நின்று மோதிக் கொள்கிறார்களோ... அவர்கள் எல்லோருமே ஒன்றாகச் சேர்ந்து போஸ் கொடுத்துச் சிரிக்கிற காட்சிகூட அரங்கேறும். புகையாகக் கிளம்பிய விவகாரம் புகை போலவே அடங்கியும் போகும். எல்லாம், ஆசிரமத்தின் சொத்தும் பணமும் படுத்துகிற பாடு!'' என்கிறார்கள் அழுத்தமாக! இரா.சரவணன்*********

புருடானந்தா'வின் பின்னணியைத் தேடி...!

'மீண்டும் வருவேன். மீண்டு வருவேன். அதே ஆசிரமத்தில் உட்காருவேன். யாரும் கவலையேபடாதீங்க..' தனது பிரதான சீட கோடிகளுக்கு வடக்கிலிருந்து தொடர்ந்து தகவல் அனுப்பி வருகிறாராம் நித்தியானந்தர். சில நாட்கள் தலைமறைவு. அதன் பிறகு அறிக்கை. அதன் பிறகு விளக்க சிடி. பிறகு மீடியாவுக்கு பேட்டி என நித்தியானந்தர் என்னவோ மெதுவாக வெளியே வந்து கொண்டுதான் இருக்கிறார். அடுத்த மாதம் பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தே தீருவார் என்றும் ஆசிரமத் தரப்பில் உறுதிப்படுத்துகிறார்கள். அஞ்சி அஞ்சி ஓடிய நித்தியானந்தர்... அஞ்சாமல் வெளியே வரத் தயாராவதன் காரணமாக, பல விஷயங்கள் கசியத் துவங்கியுள்ளன.   அதிகார பக்தை... அடங்கிய லெனின் கருப்பன்..!
google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
'விடாது கருப்பு' கதையாக நித்தியானந்தரின் லீலைகளை வைத்து அவரைத் தூக்கமிழக்கச் செய்துள்ள லெனின் கருப்பன் என்கிற தர்மானந்தாவை பற்றி சென்னை மாநகர போலீஸ் இதுநாள் வரை மூச்சுகூட விடாமல், ரகசியம் காத்துக் கொண்டிருக்கிறது. ''புகாரின் மையமானவரை மீடியாக்கள் போட்டுத் துவைத்துக் கொண்டிருக்க... அவர் மீது புகார் கொடுத்தவரின் யோக்கியதாம்சங்களையும் மக்கள் தெரிந்துகொள்ள நினைப்பதுதானே நியாயம்? அது தெரிந்தும் போலீஸார் லெனினை பொத்திக் காப்பது ஏன்?'' என்று ஆசிரம விசுவாசிகள் குமுற... அவர்களில் விவரமான சிலரிடம் இருந்தே பதிலும் வருகிறது. பெங்களூருவில் வசிக்கும் - தமிழ்நாட்டு அரசியலோடு தொடர்புடைய ஒரு பெண்மணி நித்தியானந்தரின் தீவிர பக்தராம். அடிக்கடி பிடதி ஆசிரமத்துக்கு அந்தப் பெண்மணி போய் வந்திருக்கிறாராம். சில வருடங்களுக்கு முன்பு அந்தப் பெண்மணிக்கும், நித்தியானந்தருக்கும் ஒரு நில விவகாரத்தில் கருத்து வேற்றுமை உண்டாக... நித்தியானந்தரை பார்ப்பதை அடியோடு நிறுத்திக் கொண்டாராம். ''இப்போது அந்தப் பெண் மூலமாக சமாதானம் பேசித்தான், தமிழகத்தில் எந்தப் பிரச்னையும் வராமல் இருக்க ஏற்பாடு செய்கிறது நித்தியானந்தர் தரப்பு!'' என்கிறார்கள் இந்த ஆசிரம விசுவாசிகள். தர்மானந்தாவுக்கு ஆரம்பத்திலிருந்து அடைக்கலம் கொடுத்து வந்த பலரும் இப்போது பவர்ஃபுல்லான சிபாரிசால் ரிவர்ஸ் கியர் போட ஆரம்பித்திருக்கிறார்களாம். ''கூடிய சீக்கிரமே, விவகாரம் உல்டாவாகி... சி.டி. வெளியாகக் காரணமான தர்மானந்தா மீதே வழக்கு பாய்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!'' என்று சொல்பவர்கள்... ''காந்தப் படுக்கை விவகாரம் வெடித்த சமயத்தில், சென்னையைச் சேர்ந்த மார்வாடி ஒருவர் கொடுத்த மோசடி புகார் சேலம் ஏரியாவில் அப்போது பதிவானது. அதையும் லெனினுக்கு எதிராக போலீஸ் தட்டி எடுத்துத் தயாராக வைத்திருக்கிறது. சிக்னல் வரவேண்டியதுதான் பாக்கி!'' என்கிறார்கள். தருமானந்தா... ஒரு புருடானந்தா?! ''வெளியிடாத சி.டி-க்களும் உண்டு. பேரத்துக்கு இப்போதாவது உடன்படாவிட்டால்... அவையும் வெளியாகும்!'' என்று நித்தியானந்தருக்கு தகவல் போனபடியே இருக்கிறதாம். ''இப்போது பேரத்துக்கு ஒப்புக்கொண்டாலும், இதே மிரட்டல் தொடராது என்பதற்கு உத்தரவாதமில்லை. உங்களை ஒரு பணங்காய்ச்சி மரமாக்கிவிடப் பார்க்கிறார்கள்'' என்று நித்தியானந்தருக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள், அவருடயை விசுவாசிகள். இன்னொரு புறம், ''தர்மானந்தா பற்றிய விவகாரங்கள் அத்தனையும் திரட்டி வையுங்கள்!'' என்று ஆசிரமத்துக்கு உத்தரவு வர... அதை கர்மசிரத்தையோடு செய்தபடி உள்ளதாம் ஒரு டீம்! இதில் ஒருவர், ''பக்தர்களை தனியே சந்தித்த தர்மானந்தா, 'சுவாமிஜியை உங்க வீட்டுக்கே வர ஏற்பாடு பண்றேன்' என்று சொல்லி ஏராளமாகப் பணம் வாங்கியிருக்கிறார். இதை பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலமாகவே வாங்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம். இதை வைத்து கர்நாடகத்தில் அவர் ஒரு புருடா பார்ட்டி என்று நிரூபித்து, தண்டனை வாங்கித் தர கிரவுண்ட்ஸ் தயாராக இருக்கிறது!'' என்கிறார்கள். பேரை மாத்தினாலும் தலையெழுத்து மாறாது..! 'நித்தியானந்தரின் பக்தகோடி' என்று ஆளுக்கொரு வி.ஐ.பி-யை நோக்கி கைநீட்டிக் கொண்டிருக்க... டி.வி-யில் வந்து பெயர் மாற்ற ஜோதிடம் நடத்தும் பிரபல நேமாலஜிஸ்ட் லட்சுமிஜெயசொரூபாவை நோக்கியும் சேலத்தில் ஒரு பேச்சு கிளம்பிவிட்டது. ''பேரில் சில மாற்றங்கள் செய்யும்படி சுவாமிக்கு இவர் அட்வைஸ் கொடுத்தார்'' என்றும்கூட சொல்கிறார்கள். இதை பற்றி லட்சுமிஜெயசொரூபாவிடமே பேசினோம். அவரோ, ''நித்தியானந்தரும் என்னை வந்து சந்திச்சது கிடையாது. நானும் அவரை போய் சந்திச்சது கிடையாது. அவரை போய் சந்திக்க சொல்லி பலரும் என்கிட்ட சொல்லியிருக்காங்க. ஆனா, ஆரம்பத்துல இருந்தே அவரு மேல எனக்கு நம்பிக்கை கிடையாது. அதனால அவரை போய் நான் சந்திக்கவே இல்ல. அப்படியே அவரு என்கிட்ட வந்து அவரோட பேரை மாத்தியிருந்தாலும், இந்த மாதிரியான பிரச்னைகள்ல இருந்து தப்பிச்சிருக்க முடியாது! ஏன்னா, அவரு மக்களை மட்டும் ஏமாத்தலை... கடவுளையும் ஏமாத்திட்டாரு. கடவுள் பேரை சொல்லிக்கிட்டு அந்த ஆளு செஞ்ச அநியாயங்களை ஆண்டவனாலேயே பொறுத்துக்க முடியல. அதனாலதான் இவரோட சுயரூபத்தை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிட்டான். மொத்தத்தில், இப்படியெல்லாம் பிரச்னை வரும்னு நான் முன்னாடியே நினைச்சேன். அதனாலதான் அந்தப் பக்கம் தலைவச்சிக்கூட படுக்கல...'' என்கிறார், நிம்மதிப் பெருமூச்சோடு! கோபத்தில் கொளத்தூர் மணி... பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், 'யார் பெரிய மோசடிக்காரர்? காஞ்சி தேவநாதனா? நித்தியானந்தனா?' என்றெல்லாம் போஸ்டர் அடித்துப் பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். சாமியார்கள் விஷயத்தில் எப்போதுமே கடுங்கோபத்தையும் கனல் வார்த்தைகளையும் கக்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர் மட்டும், நித்தியானந்தர் விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்க காரணம் என்ன..? அமைப்பின் தலைவர் கொளத்தூர் மணியிடமே கேட்டோம். ''என்னது..? நாங்க அடக்கி வாசிக்கிறோமா... கிடையவே கிடையாது! நித்தியானந்தர் பண்ணியது, கடுமையாகக் கண்டிக்க வேண்டியதுதான். நித்தியானந்தரும் அவரு கூட இருக்குற பொண்ணும் உடன்பட்டு உடலுறவு வெச்சிக்கிறாங்க. இது இயற்கைதான். காவி வேட்டி கட்டி, சாமியார் வேஷம் போடுறவன் உடலுறவு வெச்சிக்கிட்டான் என்பதாலேயே பிரச்னை பெருசாயிடுச்சி. தப்பு செய்யுறவனோட முகத்திரையை கிழிக்கிறது தப்பே இல்ல. ஆனா, அதனால சமுதாயம் பாதிக்கப்படாம பார்த்துக்க வேண்டிய கடமை, மீடியாக் களுக்கும் இருக்கு. நித்தியானந்தர் மட்டும் இல்லாம, தமிழ்நாட்டுல இன்னும் எண்ணி லடங்காத சாமியார் கள் இருக்காங்க. ஒருத்தன் சாமியார் னாலே அவன் அயோக்கியன்தான் என்பதை மக்கள் உணரணும். இந்த ஏமாத்துக்காரங்க எல்லோரோட அயோக்கியத்தனத்தையும் எழுதுங்கனு மீடியாக் களைக் கேட்டுக்குறேன்...'' என்று கோபம் காட்டினார் கொளத்தூர் மணி. உருட்டப்படும் அரசியல் தலைகள்..! தமிழகத்தைச் சேர்ந்த எட்டு அமைச்சர்கள் நித்தியானந்தரை பல சந்தர்ப்பத்தில் சந்தித்திருக்கிறார் களாம். தன்னை எப்போதும் திராவிடப் பாரம் பரியத்தின் தூணாகவே காட்டிக் கொள்ளும் ஓர் அமைச்சரின் குடும்பத்தில் நித்தியானந்தர் மீது பாசம் அதிகமாம். நித்தியானந்தரின் ஆசிரமத்துக்கு அவர் வீட்டிலிருந்து பலமுறை சென்று, லட்சக் கணக்கில் பணத்தையும் கொடுத்துவிட்டு வந்திருக் கிறார்களாம். ''அப்பவே சொன்னேன்... வீட்டுல கேட்கலை...'' என்று நட்பு வட்டாரத்தில் சொல்லி வருந்துகிறாராம் அந்த அமைச்சர்.


 
Login
Nickname

Password

Don't have an account yet? You can create one. As a registered user you have some advantages like theme manager, comments configuration and post comments with your name.

Related Links
· More about Religion
· News by sound


Most read story about Religion:
Hindu Temple demolished


Article Rating
Average Score: 1
Votes: 1


Please take a second and vote for this article:

Excellent
Very Good
Good
Regular
Bad


Options

 Printer Friendly Printer Friendly


Google
 
Disclaimer: The views expressed by the authors and comments on this website are the sole responsibility of the writers themselves. The writer will take full responsibility, liability, and blame for any libel or litigation that results from something written in or as a direct result of something written in a comment. The accuracy, completeness, honesty, exactitude and factuality of the articles and comments are not guaranteed by iMOL.

If you do not wish any of your writing republished here, please send mail to sound20[at]gmail.com. Allow us one month to remove it. Thanks. Copyright © 1998 iMOL

Page Generation: 0.70 Seconds