iMOL Archives - Nithyananda sex scandal
Welcome iMOL Archives

imol

 

 
Home 2SubscribeTrigger HappyEthnic ClashForumHistorySocialPoliticsEconomyEducationPlantation WorkersAbout me
Silence is not an option when things are ill done - Lord Alfred Dennings
Search   in  

 Create an AccountMain Home | Submit News | Your Account | Content | Topics | Top 10  

Modules
· Home
· Advertising
· AvantGo
· Feedback
· Forums
· Private Messages
· Recommend Us
· Search
· Statistics
· Stories Archive
· Submit News
· Surveys
· Top 10
· Topics
· Your Account

Who's Online
There are currently, 9 guest(s) and 0 member(s) that are online.

You are Anonymous user. You can register for free by clicking here

Languages
Select Interface Language:


Random Headlines

Religion
[ Religion ]

·Hindu Influence and Southeast Asia
·Spiritual leader Sathya Sai Baba passes away
·Hindu mum wants conversion fight brought to apex court
·Conversion a favorite hobby of religious zealots
·Harry Potter star Afshan threatened by family for dating Hindu boy Read more: H
·S'gor MB: No more developments that displace temples
·Finas regrets Deepavali clip offended Hindus
·Misleading advertisement of FINAS
·Julia Roberts embraces Hinduism

  
Sex News: Nithyananda sex scandal

Contributed by Anonymous on Wednesday, March 10 @ 07:54:42 CST

Religion
Vikatan.com, Mar 10 2010





''உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக, ஆழமாக நான் சொல்ல விரும்புகிறேன். சட்ட ரீதி யாக எந்தத் தவறையும் நானோ தியான பீடமோ செய்யவில்லை. இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகள் சார்ந்த உண்மைகளையும் திரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எல்லா உண்மைகளும் கூடிய சீக்கிரம் உங்களுக்கு சொல்லப்படும். அதுவரை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...''


வீடியோ வெளிச்சத்தில் நடிகையுடன் குளித்த பரமஹம்ஸ நித்தியானந்தர் தானாகவே முன்வந்து மீடியாக்களுக்கு அனுப்பிய விளக்க சி.டி-யில்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார். ''இதில் 'சட்டரீதியாக' என்று சாமியார் சொல்லியிருப்பதை அடிக்கோடிட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஆணும் பெண்ணும் பரஸ்பரம் சம்மதித்து இணைவதை சட்டம் ஒருபோதும் குற்றமாகப் பார்ப்பதில்லை. அந்த வகையில் நடிகை ரஞ்சிதாவை சுவாமிஜி 'காந்தர்வ விவாகம்' புரிந்து வெகுநாள் ஆகிறது என்ற கோணத்தில் விவகாரம் போனாலும் ஆச்சர்யமில்லை!'' என்கிறார்கள் ஆ...சிரம உள் தகவல் அறிந்தவர்கள். ''அந்த அந்தரங்கக் காட்சியை அத்துமீறி படம் பிடித்து, அதை மீடியா பார்வைக்கு அனுப்பி வைத்தவர்தான் குற்றவாளி. அந்த வகையில் ஆசிரமம் குறிவைப்பது லெனின் என்கிற தர்மானந்தாவை!'' என்றும் ஒரு யூகத் தகவல் உலா வருகிறது. 'கேட்டதைக் கொடுப்போம்!' ''ஆசிரமத்தில் புழங்கும் கோடிகளைப் பார்த்து சிலிர்த்துப் போய் நடிகை ரஞ்சிதாவே ரகசிய கேமரா வைத்து, அத்தனையும் படம் பிடித்தார். பிறகு பேரம் நடத்தும்போதுதான் லெனின் என்கிற தர்மானந்தாவை உடன் சேர்த்துக்கொண்டார்!'' என்று ஒரு தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. இதுகுறித்து கருத்து சொல்லவேண்டிய ரஞ்சிதா இதுவரை அமைதி காக்கி றார். அதேசமயம், ''பிளாக்மெயில் விவகாரத்தில் யாரை யார் ஓவர்டேக் செய்தார்களோ தெரியாது... ஆனால், பேரம் படியாத நிலையில் அது மீடியா வுக்குக் கொடுக்கப்பட்ட நிலையில்... நாடறியக் காட்சிகள் ஓட ஆரம்பித்த ஒருசில நிமிடங்களிலேயே ஆசிரமத் தரப்பிலிருந்து அங்குமிங்கும் போன்கள் பறந்தன. 'கேட்டதைக் கொடுத்துத் தொலைப்போம். முதலில் மீடியாவில் வராமல் அதைத் தடுக்க முடியுமா பாருங்கள்!' என்று ஒரு சட்ட நிபுணர் பதறிக்கொண்டே இருந்தார்!'' என்றும் கூறுகிறார்கள் விவரமானவர்கள். கொதிப்பும் கேமராவும்! 'ரஞ்சிதா அந்தக் காட்சிகளை எடுக்கக் காரணமானவர்' என்ற கூற்றை மறுக்கிறார்கள் ஆசிரமத்தோடு நெருங்கிய வேறு சிலர். இவர்கள் கைநீட்டுவது, அதே ஆசிரமத்தில் தங்கியிருந்த ஒரு வெளிநாட்டு பக்தையைத்தான்! ''ஏகப் பட்ட பக்தியோடு நித்தியானந்த சாமியாரைத் தேடி வந்தார் அந்த பக்தை. ஆசிரமத்திலேயே தங்கி நெக்குருகி வழிபாடு நடத்தினார். ஆனால், காலம் போகப் போக அங்கே இலைமறை காயாக அரங்கேறிய சம்பவங்களைப் பார்த்து அதிர்ந்தே போனார் அந்த வெளிநாட்டுப் பெண்மணி. அவர்தான், அறைக்குள் நடப்பதை அம்பலத்துக்குக் கொண்டுவரும் திட்டத்தைப் போட் டார். அதிநவீன கேமராவை அந்த இடத்தில் பொருத்தினார். ரஞ்சிதாவின் ஒத்துழைப்பை இதில் எந்தளவுக்கு அவர் கேட்டு வாங்கிக் கொண்டார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. நித்தியானந்தர் செய்கிற காரியங்கள் பிடிக்காமல் இருந்த சக காவிகளில் ஒருவரிடம் அதைக் கொடுத்து மீடியாக்களிடம் அம்பலப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். ரகசியப் பதிவை வாங்கிப் பார்த்தவர்களுக்கு அது காசு கொட்டும் மந்திரத் தகடாகவே தெரிந்தது. அவர்கள் ரகசியமாக பேரத்தை நடத்த ஆரம்பித்தார்கள். அது படியாதபோதுதான் மீடியாவில் கொடுத்தார்கள். இடையில் நடந்த பேரங்களைப் பற்றி மெதுவாகத் தெரிந்துகொண்ட அந்த வெளிநாட்டு பக்தை, 'யாரைத்தான் நம்புவதோ' என்று வெறுத்துப் போனார்...'' என்றும் ஒரு விறுவிறு வரலாற்றை இப்போது சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் ஆசிரம ஏரியாவில். தர்மானந்தாவும் காந்தப் படுக்கையும்..! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வேப்பம்பூண்டி கிராமம்தான் லெனினின் சொந்த ஊர். படிப்பு பத்தாம் வகுப்புதான். விகேன் நிறுவனம் காந்தப் படுக்கை பிசினஸ் செய்த போது பல விவகாரங்கள் எழுந்தன. காந்தப் படுக்கை மோசடியில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பன்னிரண்டு பேரை போலீஸ் கைது செய்தது. அப்படி கைது செய்யப்பட்டவர்களை வெளியில் கொண்டு வர சட்டப்படியான எல்லா வேலைகளையும் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டது இவர்தான். ஒரு கட்டத்தில் லெனினையும் போலீஸ் கைது செய்தது. லெனினை அப்ரூவராக மாற்ற போலீஸ் எவ்வளவோ முயற்சி செய்தபோதும், 'எந்தச் சூழ்நிலையிலயும் நான் யாரையும் காட்டிக் கொடுக்க மாட்டேன்..' என்று பிடிவாதமாக அப்போது மறுத்து விட்டாராம். அதன் பிறகு சென்னையில் ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இவர், நித்தியானந்தரின் பிரசங்கத்தைக் கேட்டு அவரோடு ஐக்கியமானதாகச் சொல்லப் படுகிறது. நித்தியானந்தரின் பிடதி ஆசிரமத்தில் சேர்ந்தபோது லெனினின் பெயரை தர்மானந்தா என மாற்றினார் நித்தியானந்தா. ஏற்கெனவே மீடியாக்களை வளைத்துப் போடுவதற்கு வாய் சாமர்த்தியம் மிக்க சிஷ்யர்கள் இவரிடம் இருந்தபோது, தர்மானந்தாவின் 'மக்கள் தொடர்பு' நித்தியானந்த சாமியாருக்கு ரொம்பவே பிடித்துப் போனதாம். ஆசிரமத்தில் ஒரு சீடராக நுழைந்த தர்மானந்தா, ஒரு கட்டத் தில் நித்தியானந்தருக்கு நெருக்கமான உள்வட்டத்துக்குள் போய்விட்டார்! நித்தி யானந்தர் பெயரில் வெளியாகும் நூல்கள், சி.டி-க்கள் என வெளியீட்டுப் பிரிவை கவனிக்கும் பொறுப்பை இவர் பார்த்துக்கொண்டார். கடைசியில், ஆசிரமத்துக்குள் பதிவான 'காந்தப் படுக்கை' சி.டி. வெளியீட்டுப் பணியை யும் அவரே செய்துவிட்டார் என்று கொதிக்கிறார்கள் ஆசிரம விசுவாசிகள் இப்போது! கோபிகா கொஞ்சும் ஆனந்தா..! ''2006-ம் ஆண்டு அமெரிக்க என்.ஆர்.ஐ-யான கோபிகா என்ற இருபத்திரண்டு வயதுப் பெண் நித்தியானந்தருடன் வந்து சேர்ந்திருக்கிறார். நித்தியானந்தர் அவரது பெயரை, மா நித்ய கோபிகா என மாற்றி யமைத்திருக்கிறார். சுவாமிஜியுடன் மிகவும் நெருங்கிப் பழக ஆரம்பித்த பெண் சீடர் கோபிகாதானாம். நித்தியானந்தரின் படுக்கையறை வரை சென்ற முதல் சீடர் என்ற பெருமை கோபிகாவையே சேரும் என் கிறார்கள். ''சில வருடங்களுக்கு முன்பு நடிகை ராகசுதா ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். நித்ய கோபிகாவும், ராகசுதாவும்தான் நித்தியானந்தருக்கு எல்லாமுமாகிப் போனார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் ராகசுதாவுக்கு பணத்தின் மீது ஆசை அதிகமாயிடுச்சி. 'நடிகை ரஞ்சிதா எனக்கு ஃபிரண்டுதான். அவுங்களை வச்சி ஒரு யோகாசனப் பயிற்சி வகுப்பு நடத்தலாம். அதை சி.டி-யாக வெளியிட்டா மக்களுக்கு எளிமையாக போய் சேரும். நீங்க அனுமதி கொடுத்தா நான் ரஞ்சிதாகிட்ட பேசி பார்க் கிறேன்'னு சுவாமிஜிகிட்ட சொன்னதே ராக சுதாதான்! சுவாமிஜி ரஞ்சிதாவை கூட்டிட்டு வரதுக்கு சரின்னு சொன்னதும் அவுங்களை பேசி கூட்டிட்டு வந்தது ராகசுதாதான். ஆனா அவுங்க அதுக்குப் பின்னாடி ஒரு மிகப்பெரிய திட்டம் வச்சிருக்காங்கங்குறது யாருக்கும் தெரியாது. ரஞ்சிதா ஆசிரமத்துக்கு வந்து சில மாதங்களிலேயே சுவாமியோட பெட்ரூம் வரைக்கும் போற அளவுக்கு அவங்களும் பழகிட்டாங்க. இவங்களுக்கு தர்மானந்தாவும் ரொம்ப க்ளோஸ்!'' என்று சொல்கிறார்கள் ஆசிரமத்தோடு மிக நெருக்கத்தில் இருக்கும் சிலர். பூட்டிய அறைக்குள் வாக்குமூலம்! 'சி.டி-யை மீடியாவுக்குக் கொடுத்தோம். கிளம்பினோம்' என்றில்லாதபடி, போலீஸ் தரப்பு அடுத்தடுத்து மேற்கொண்ட கிடுகிடு மூவ்களில் மொத்தமாக இன்வால்வ் ஆகிக் கிடக்கிறாராம் தர்மானந்தா. சாத்திய அறைக்குள் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆசிரமத்தை பற்றிய அத்தனை விஷயங்களையும் முக்கிய போலீஸ் அதிகாரி யிடம் கொட்டியிருக்கிறாராம் இவர். அத்தனையையும் கேட்டு ஆடிப் போன அந்த அதிகாரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் அவரை அனுப்பி வைத்தாராம். அங்கே தர்மானந்தா ஏகத்துக்கும் கொட்டித் தள்ளினாராம். ''ஆரம்பத்துல பார்க்கும்போது இவரை (நித்தியானந்த சாமியார்) போல ஒரு நல்லவரு இந்த உலகத்துலயே கிடையாதுங்குற எண்ணம் தான் எல்லோருக்கும் வரும். ஆனா அவரு கூடப் பழகிப் பார்த்தாதான் அவரை போல ஆசை பிடிச்ச ஆளு இருக்க முடியாதுங்குறது புரியும். நானும் என்னைப் போல பலரும் அந்த ஆளோட பேச்சுல மயங்கித்தான் அவரோட ஆசிர மத்துல சேவை பண்ணிட்டு இருந்தோம். ஆனா ஆசிரமத்துல இருக்குற பொண்ணுங்ககிட்ட அவரு நடந்துக்குற முறையைப் பார்த்துதான் அவரு மேல எங்களுக்கு வெறுப்பு வந்துடுச்சி. எந்தப் பொண் ணையும் தொடாம பேசுற பழக்கம் கிடையாது. காலேஜ்களுக்கு ஆன்மிக உரை நிகழ்த்தப் போறபோது கல்லூரி மாணவிகளோட கண்ணையெல்லாம் கட்டச் சொல்லிடுவாரு. இவரு மட்டும் கண்ணை தொறந் துட்டு பிரசங்கம் பண்ணுவாரு. கேட்டா மனசு அலை பாயாம இருக்குறதுக்குன்னு சொல்லுவாரு. காரணம் அது கிடையாது. கண்ணை கட்டிட்டா இவரு பார்வை போகிற திசையெல்லாம் யாருக்கும் தெரியாது, பாருங்க...'' என்று போலீஸிடம் தன் பழைய குருஜி பற்றி எடுத்து விட்டிருக்கிறார் தர்மானந்தா என்கிற லெனின்! . கூடவே, ''அவரோட பெட்ரூம்ல கட்டிலுக்குக் கீழே ஒரு பெரிய ரேக் வச்சிருப்பாரு. அதுல வித விதமான காமசூத்ரா புத்தகங்களை வச்சிருப்பார். பணிவிடை செய்ய ரூமுக்கு வந்த ஒரு பொண்ணை மட்டும் காமசூத்ரா புத்தகத்தை எடுத்து சத்தமாகப் படிக்கச் சொல்லுவாரு. கண்களை மூடி ரொம்பவே ரசிச்சி அந்தப் பொண்ணு படிக்கிறதை கேட்பாரு...'' என்று ஆரம்பித்து சில காட்சிகளையும் விவரித்திருக்கிறார். ''கட்டில் மேல நாலஞ்சு பொண்ணுங் களை உட்காரச் சொல்லிட்டு இவர் நடுவுல படுத்துக்கிட்டு, 'நான்தான் கிருஷ்ண பகவான். நீங்க எல்லாம் கோபிகைகள்' என்று சொல்லி களியாட்டம் போடு வாரு!'' என்றெல்லாம் தர்மானந்தா கொடுத்திருக்கும் வாக்குமூலங்களைத்தான் கோர்ட் விவகாரங்களுக்கு ரொம்பவே நம்பியிருக்கிறதாம் போலீஸ்! பாதிக்கப் பட்ட பெண்கள் என்று சிலரை தானே போலீஸாரிடம் கொண்டு வந்து நிறுத்துவ தாகவும் சொல்லியிருக்கிறாராம். அப்படி யரு ஆத்திரம் முன்னாள் குருஜி மீது! ஆட்டிப் படைக்கும் ஐந்து பேர்..! பரந்து விரிந்து கிடக்கும் நித்தியானந் தரின் தியான பீடம் ஐந்து பேருடைய கட்டுப் பாட்டில்தான் இதுவரை இருந்து வந்ததாகச் சொல்கிறார்கள் நித்தியானந்தரின் தீவிர பக்தர்கள். ''நித்தியானந்தாவுக்கு அடுத்தபடியாக ஆசிரமத்தில் சக்தி வாய்ந்தவர் நித்ய சதானந்தா. நித்தி யானந்தாவின் செக்ரெட்டரியான இவர் தான் நித்தியானந்தா ஊரில் இல்லாத போதெல்லாம் பக்தர்களுக்கு அருளாசி தருவாராம். நெம்பர் டூ என எல்லோரும் கை காட்டுவது நித்தியானந்தரின் உடன் பிறந்த சகோதர ரான நித்திஸ்வரானந்தா. தியான பீடத்தின் கணக்குப்பிள்ளை. ஆசிரமத்தின் வரவுகளில் தொடங்கி செலவு கணக்கு வரை அத்தனையும் இவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கும். எந்த விழாவுக்கு எவ்வளவு என நித்தியானந்தருக்கு ரேட் ஃபிக்ஸ் பண்ணுவது வரை அத்தனையும் ஐயாதான்..! நித்ய ஆத்மானந்தா, ஸ்ரீ நித்ய ஞானானந்தா இவர்கள் இரண்டும் பேரும் அதற்கடுத்த இடங்களுக்கு சொந்தக்காரர்கள். நித்தியானந்தர் எங்கே போனாலும் கூடவே இவர்கள் இரண்டு பேரும் கிளம்பி விடுவார்கள். கிட்டத்தட்ட சுவாமிக்கு செக்யூரிட்டி போல நிற்கும் இவர்களைத் தாண்டி அவ்வளவு எளிதில் யாரும் நித்தியானந்தரை நெருங்கி விட முடியாதாம். ஐந்தாவது இடம்தான் நாம் ஏற்கெனவே சொல்லி யிருக்கும் நித்தியானந்தரின் பர்சனல் பி.ஏ-வான மா நித்யானந்த கோபிகா. ஆசிரம விவகாரங்கள் வெளியே கசிந்து விடாமல் பார்த்துக் கொள்வதும் இந்த ஐந்து பேரின் கண்காணிப்பில்தான் நடக்கு மாம். ''நித்தியானந்தரின் அறைக்கு எந்தப் புழுப் பூச்சி போனாலும் அது கோபி காவுக்குத் தெரியாமல் இருக்காது..'' என்று குறிப்பாக அடித்துச் சொல்கிறார்கள் ஆசிரமத்திலிருந்து இப்போது வெளியேறி வந்த சிலர். தியான பீடம் இனி..? பிடதியில் உள்ள தியான பீடத்தை நடந்து சுற்றிப் பார்ப்பதற்கு நிச்சயம் ஒரு நாளாவது ஆகும். தியானம், யோகா, தங்கும் விடுதி என தனித்தனியாக இருக்கும் ஆசிரமத்தை இப்போது நித்தியானந்தாவின் செக்ரெட்டரியான நித்ய சதானந்தா கவனித்துக் கொண்டிருக்கிறார். ''ரஞ்சிதா கூட சுவாமிஜி ஒன்றாக இருந்தது எந்த வகையிலும் சட்டப்படி தப்பான விஷயமாகாது. அதனால அது பெரிய விஷயமே கிடையாது. மான் தோல் வச்சிருந்தது, புலித் தோல் வச்சிருந்ததுன்னு சில கேஸ்ல மட்டும்தான் பிரச்னைகள் வரும். அதிலிருந்தும் எப்படி வெளியே வரதுன்னு சட்ட ரீதியாக ஆலோசனை நடத்திட்டு இருக்கோம். எல்லா வழக்குகளும் முடிஞ்ச பிறகு சுவாமிஜி கண்டிப்பா மறுபடியும் தியான பீடத்துல வந்து உட்காரு வாரு. மக்களுக்கு நல்லது செய்வாரு. இந்த மாதிரியான அச்சுறுத்தலையெல்லாம் கண்டு சுவாமிஜி ஓடி ஒளிஞ்சிட மாட்டாரு...'' என்று சொல்கிறார்கள் நித்தியானந்தருக்கு இன்ன மும் நெருக்கமாக இருப்பவர்கள். கர்நாடகாவில் இருக்கும் பல அரசியல் வாதிகள், அதிகாரிகளின் ஆதரவு நித்தியானந்தாவுக்கு இருப்பதால் எதுவும் நடக்கலாம்... ஆச்சர்யப்படுவதற்கு இல்லை! சமீபகாலமாக இளைஞர்களை நோக்கியே ஆசிரமங்கள் குறிவைப்பதும், இளவயசுக்காரர்களும் எளிதில் போய் அங்கே ஐக்கியமாவதும் எதனால் நடக்கிறது? பெங்களூருவில் உள்ள தேச

 
Login
Nickname

Password

Don't have an account yet? You can create one. As a registered user you have some advantages like theme manager, comments configuration and post comments with your name.

Related Links
· More about Religion
· News by sound


Most read story about Religion:
Hindu Temple demolished


Article Rating
Average Score: 5
Votes: 1


Please take a second and vote for this article:

Excellent
Very Good
Good
Regular
Bad


Options

 Printer Friendly Printer Friendly


Google
 
Disclaimer: The views expressed by the authors and comments on this website are the sole responsibility of the writers themselves. The writer will take full responsibility, liability, and blame for any libel or litigation that results from something written in or as a direct result of something written in a comment. The accuracy, completeness, honesty, exactitude and factuality of the articles and comments are not guaranteed by iMOL.

If you do not wish any of your writing republished here, please send mail to sound20[at]gmail.com. Allow us one month to remove it. Thanks. Copyright 1998 iMOL

Page Generation: 1.68 Seconds